சென்னை பூவிருந்தவல்லியில் ஒரே கடையை சேர்ந்த 50 ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி...! சக ஊழியர்கள் பீதி!

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் ஒரே துணிக்கடையை சேர்ந்த 50 ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா தொற்று நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வருகிறது. சென்னையில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. இவற்றில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,036 ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,606ஆக உள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 1318ஆக உள்ளது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாநகரம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதில் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். மேலும், அவர்கள் வசித்த பகுதிகளில் வைரஸ் பரவாமல் இருக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், கொரோனாவாவை கட்டுப்படுத்த முடியாமல் அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் திணறி வருகின்றனர். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முக்கிய பணியாளர்களான மருத்துவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பலரும் கடந்த சில நாட்களாக கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை பூவிருந்தவல்லியில் பிரபல துணிக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மாநகரம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது இந்த துணிக்கடையில் பணிபுரிபவர்களுக்கும் கொரோனா பரிசோதனையானது எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 60 ஊழியருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 50 ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உறுதி செய்யப்பட்ட 50 ஊழியர்களும் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து துணிக்கடை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.

Related Stories: