இதுதாங்க கொரோனா ஷிப்ட் வெளியே உதவி கமிஷனர் உள்ளே சப்-இன்ஸ்பெக்டர்

பூந்தமல்லி: போரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோர் ஊரடங்கு காலத்தில் பணியாற்றியபோது, அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தனர். இருவரும் பூரண குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வந்த இருவருக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்பளித்து, மலர் தூவி, பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து, மேள, தாளங்கள் முழங்க போரூர் போலீசார் வரவேற்றனர். மேலும், மற்ற போலீசாருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக கடலை, முட்டை வழங்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த சிறிது நேரத்தில் போரூர் உதவி கமிஷனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பிய போலீசாரும் பணியில் இருந்த சக போலீசாரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, உதவி கமிஷனர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு உதவி கமிஷனருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் போலீசாரை ஷிப்ட் போட்டு தாக்கிய கொரோனாவை நினைத்து சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் போரூர் காவல்நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: