திருப்போரூர் அருகே பொது இடத்தில் பாதை அமைத்த பிரச்னையில் ரியல் எஸ்டேட் உரிமையாளரின் ஆதரவாளர்கள் 5 பேர் கைது: அனைத்து காவலர்களையும் கூண்டோடு மாற்ற முடிவு

சென்னை: திருப்போரூர் அருகே பொது இடத்தை ஆக்கிரமித்து பாதை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், ரியல் எஸ்டேட் உரிமையாளரின் ஆதரவாளர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்போரூர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ உட்பட அனைத்து காவலர்களையும் கூண்டோடு மற்றவும் உயர் அதிகாரிகள் முடிவு செய்து இருப்பததாக கூறப்படுகிறது. திருப்போரூர் அடுத்த செங்காடு கிராமத்தில் ஊருக்கு சொந்தமான பொது இடத்தில் பாதை அமைப்பது சம்மந்தமான மோதலில் இமயம் ரியல் எஸ்டேட் உரிமையாளர் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 3 பேரையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் குமார் தரப்பை சேர்ந்த மேலும் 5 பேரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரச்னையை கையாளும் வகையில் உடனடியாக திருப்போரூர் காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக  கலைச்செல்வி நியமிக்கப்பட்டார். மேலும், இந்த மோதல் சம்பவத்தில் திருப்போரூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ மற்றும் காவலர்கள் உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தரவில்லை என்று கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ மற்றும் அனைத்து காவலர்களையும் கூட்டோடு இடமாற்றம் செய்ய காவல்துறை உயரதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக திருப்போரூர் காவல் நிலையத்தில் உளவுத்துறை பிரிவு எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த சந்திரசேகரை அதிரடியாக காஞ்சிபுரத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர். இவர், இதே காவல் நிலையத்தில் சுமார் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: