உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16 முதல் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு..!!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16 முதல் 19 ஆம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. அதையும் தாண்டி வடமாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி வருவதால், உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16 முதல் 19ஆம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: