போதைப் பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா ?; இந்தியா போதைப் பொருள் கடத்தல் மண்டலம் ஆகிவிட்டதா? : நீதிபதிகள் வேதனை!!

சென்னை : இந்தியா போதைப் பொருள் கடத்தல் மண்டலம் ஆகிவிட்டதா என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதானவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.

 போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி விஜய்குமாரின் மனைவி சித்ரா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதிபதிகள் : போதைப் பொருள் கடத்தல் மண்டலமாக இந்தியா பயன்படுத்தப்படுகிறதா ?

நீதிபதிகள் : போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் 10 ஆண்டில் எத்தனை வழக்குகள் பதிவாகி உள்ளன ?

நீதிபதிகள் : போதைப் பொருள் கடத்தலுக்கு வேலையில்லா திண்டாட்டம் தான் காரணமா ?

நீதிபதிகள் : போலீசாரிடம் உள்ள ஆளில்லா கேமரா மூலம் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்க, அழிக்க ஏன் முடியவில்லை ?

நீதிபதிகள் : போதைப் பொருள் வழக்குகள், குற்றங்களை கையாள தனிப்பிரிவை ஏன் உருவாக்கக் கூடாது ?

நீதிபதிகள் : போதைப் பொருள் கடத்தலில் வெளிநாட்டவருக்கு தொடர்பு உள்ளதா ?

நீதிபதிகள் : போதைப் பொருள் கடத்தலை வேரறுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன

நீதிபதிகள் : மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: