சீன பொருட்களின் எதிர்ப்பு எதிரொலி: சென்னையில் சீன தொலைக்காட்சிகளின் விற்பனை மந்தம்

சென்னை: சீன எதிர்ப்பு அலையால் அந்த நாட்டில் விற்பனையாகும் தொலைக்காட்சிகளின் விற்பனை சென்னையில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. ஜூன் 15ம் தேதியன்று எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவும், சீனாவும் மோதிக்கொண்டதில் 20 இந்திய வீரர்கள் விரமரணமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமெனவும், இந்திய பொருட்களை ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் பலதரப்புகளில் கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. இதைஅடுத்து அந்நாட்டு பொருட்களுக்கு எதிரான மனப்பான்மை இந்தியாவில் பெருகி வருகின்றன. சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக சென்னை அடையாறு, மந்தைவெளி மற்றும் தியாகராயநகரில் உள்ள ஷோரூம்களில் சீன தயாரிப்பு தொலைக்காட்சிகளில் விற்பனை பெருமளவு குறைந்துள்ளது.

சீனா தொலைக்காட்சிகள் 9 ஆயிரம் ரூபாய் முதலே கிடைப்பதால் மக்களுக்கு அதன் மீது மோகம் இருந்தது. அதனால் கடந்த 3 ஆண்டுகளாக டி.சி.எல்., எம்.ஐ., சாம்சங் போன்ற தொலைக்காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சீன பொருட்கள் மீதான மக்களின் வெறுப்பை உணர்ந்து உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: