26 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார்; இன்று மாலை வீடு திரும்புகிறார்!!

சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித் துறை அமைச்சசர் கே.பி.அன்பழகன் பூரண வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார். முழுமையாக குணமடைந்த அமைச்சர் அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார்.

*தமிழகத்தில் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றன.

*அவ்வகையில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த மாதம் 19ம் தேதி லேசான காய்ச்சலுடன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கடந்த 26 நாட்களாக அதே மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுவருகிறார்

*இதையடுத்து மியாட் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கோவிட்-19ல் இருந்து நன்றாக குணமடைந்து வருகிறார்” என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

*மேலும், அவர் தனியறையில் இருந்ததாகவும், அவரது உடல்நிலை சீராக இருந்ததாகவும், மருத்துவமனை அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தது.

*இந்நிலையில் 26 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் கே.பி.அன்பழகன் பூரண குணமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுவரை 3 அமைச்சர்கள் 11 எம்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: