தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கம்!!!

சென்னை:  கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சர்ச்சையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மாநில நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக உள்ளது. இவற்றில் 80 ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளர்.

இந்நிலையில், மேலும், மருத்துவமனைகளில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது. எனவே சிகிச்சைக்காக கூடுதல் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயத்திற்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில்தான், அரசு மருத்துவமனைகள் அல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் 230 தனியார் மருத்துவமனைகளை தமிழக அரசு சார்பாக சுகாதாரத்துறை அங்கீகரித்துள்ளது. இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன? பயன்பாட்டில் உள்ளன? என பல விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை காணும் சில கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு சென்றால் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டபோது, அரசின் பட்டியலில் தங்களின் மருத்துவமனை இடம் பெற்றிருப்பதே எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர். இதனால் கொரோனா நோயாளிகள் அழைக்களிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சர்ச்சைகள் காரணமாக 39 தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து அவர்களை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. அதாவது இந்த பட்டியலில் தேனி, கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர், தருமபுரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், கடலூர், தஞ்சாவூர், சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள்தான் இந்த 39 மருத்துவமனைகள் என்றும் சுகாராதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த விவகாரத்தில் இந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று சுகாரத்தத்துறை தலைவர் ராதாகிருஷ்ணனை கேட்டபோது, அவர் கூடியதாவது, இப்போது இது தொடர்பான நடவடிக்கைகள் ஏதும் இல்லை, அந்த மருத்துவமனையில் சில வசதி குறைபாடுகள் உள்ளன. ஏனெனில் குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதென்று தனியாக பணியாளர்கள் யாரும் கிடையாது. மேலும், நோயாளிகள் வந்து செல்ல தனி வழிகள் ஏதும் இல்லை என அவர் கூறியுள்ளார். மேலும், அந்த மருத்துவமனைகள் இத்தகைய குறைபாடுகளை சரி செய்தால் மீண்டும் பட்டியலில் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். பின்னர், தனியார் மருத்துவமனையின் சம்மதத்தை பெறாமலே அரசு இத்தகைய நடவடிக்கைகளை செய்து கொரோனா நோயாளிகளை அனுமதித்துள்ளோம் என கணக்குக்காட்டுவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனைதொடர்ந்தே 39 மருத்துவமனைகளும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: