கொத்தவால்சாவடி பகுதி சாலை ஒருவழி பாதையாக மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: கொத்தவால்சாவடி பகுதி சாலை தற்காலிகமாக இன்று முதல் ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. கொத்தவால்சாவடி பகுதியில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் நந்தகுமார் ஐஏஎஸ், இணை கமிஷனர் ஜெயகவுரி, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு கீழ்க்கண்ட தெருக்கள் அனைத்தும் தற்காலிகமாக இன்று முதல் ஒரு வழி பாதையாக மாற்றப்படுவதாக மாநகர போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:

* கொத்தவால்சாவடி உள்ளே செல்லும் வாகனங்கள் பிரகாசம் சாலை, லோன் ஸ்கொயர் அண்ணா பிள்ளை தெரு வழியாகவும், பிரகாசம் சாலை - பி.வி. ஐயர் தெரு வழியாக செல்லலாம்.

* பிரகாசம் சாலை முதல் அண்ணாபிள்ளை தெரு மற்றும் ஆதியப்பா தெரு ஆகிய தெருக்கள் தங்கசாலை வரை வாகனங்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழிப்பாதையாக செயல்படும்.

* தங்கசாலை முதல் தாதா முத்தியப்பன் தெரு, பிரகாசம் சாலை வரை வாகனங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படும்.

* தங்கசாலை அரசு மைய அச்சகம் முதல் மகாசக்தி ஓட்டல் வரை நடைமுறையில் உள்ளவாறு இருவழிப்பாதையாக செயல்படும். இந்த தற்காலிகமான போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Related Stories: