தமிழகத்தின் பாரம்பரிய சென்னை ஐகோர்ட் கட்டிடத்திற்கு 128வது பிறந்தநாள்

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு நேற்று 128வது பிறந்தநாள். இதே நாள் (நேற்று) ஜூலை 12ம் தேதி 1892ம் வருடம் உயர் நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை உருவாக்கத்தில் மாபெரும் பங்கு வகித்த பென்னிகுவிக் பொதுப்பணி துறையின் செயலாளராக, உயர் நீதிமன்ற கட்டிடத்தின் வெள்ளி திறவுக்கோலை, அப்போது கவர்னராக இருந்த வென்லாக்கிடம் கொடுக்க அவர் அந்த திறவுக்கோலை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஜான் ஆர்தர் காலின்ஸ், கையில் கொடுத்து, சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்டது.

இந்த கட்டிடம் புனித சிலுவை வடிவில் வடிவமைக்கப்பட்டு இந்தோ சரானிக் கட்டிட கலை முறையில் கட்டப்பட்டது. இன்றும், செந்நிறத்தில், சென்னை பாரிமுனையில், கம்பீரமாக, நீதியின் பிம்பமாக, உயர்ந்து நிற்கும் அழகு உயர் நீதிமன்ற கட்டிடத்திற்கு 128வது பிறந்தநாள். மொத்தத்தில் வெறும் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் ஆயிரக்கணக்கான சட்ட வல்லுனர்களையும் பல நூறு நீதிபதிகளையும் நாட்டுக்கு தந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரிய கட்டிடத்தின் முத்தாய்ப்பாக சென்னை உயர் நீதிமன்ற கட்டிடம் இன்றும் வானுயர்ந்து காணப்படுவது தமிழகத்தின் பெருமையாகும்.

Related Stories: