கொரோனா உள்ளவர்களை சோதிக்க 43,000 பல்ஸ் ஆக்ஸி மீட்டர்

சென்னை: கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவு குறையும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு வரும் அனைவருக்கும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் சோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவிகளை வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் மூலம் 43 ஆயிரம் கருவகள் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு 23 ஆயிரம் கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. அறிகுறி இல்லாமல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக ஆக்சிஜன் அளவை கண்காணிக்க, அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: