மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றுள்ள இந்திய மாணவர்கள் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தயாநிதிமாறன் எம்.பி. கோரிக்கை..!!

சென்னை: மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றுள்ள இந்திய மாணவர்கள் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். அசாதாரண சூழ்நிலையில் விசா சம்பந்தமான விலக்குகளை கொரோனா நிலைமை சீராகும் வரை நீட்டிப்பதே சிறந்தது. மேலும் இந்திய அரசு போர்க்கால நடவடிக்கையாக முயற்சிகளை செயல்படுத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எச்1 பி மற்றும் எல் 1 விசா சீர்திருத்தச் சட்டம் என்னும் பெயரில் புதிய சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

அதிபர் டிரம்ப், பதவிக்கு வந்த நாளில் இருந்து அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே என்ற கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி எச்1 பி விசாவை பெறுவதற்கான நிபந்தனைகளை டிரம்ப் நிர்வாகம் கடுமையாக்கியது.

இந்த நிலையில் மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்றுள்ள இந்திய மாணவர்களுக்கு கொரோனா நிலைமை சீராகும் வரை பாதிப்பு ஏற்படாதவாறு விசா காலத்தை நீட்டித்து மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என்று மத்திய அரசுக்கு தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: