×

கொடநாடு எஸ்டேட் வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு: 16-ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: கொடநாடு எஸ்டேட் வழக்கில் கைது செய்யப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் குறித்து வரும் 16-ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ல் காவலாளியை கொலை செய்து, கொள்ளையடித்ததாக, சயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த கோத்தகிரி போலீசார், அவர்களைக் கைது செய்தனர். இவர்களை ஜாமீனில் விடுதலை செய்து, கோத்தகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு, நீலகிரி அமர்வு நீதிமன்றம், இருவரின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ள இருவரும், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அய்யப்ப ராஜ், பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதையடுத்து காவல்துறை வரும் 16ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags : Sayan ,Manoj ,Kodanadu ,Kodanad Estate , Bail plea of Sayan and Manoj arrested in Kodanad Estate case.
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம்...