ராமேஸ்வரத்தில் மண் அரிப்பை தடுக்க ரூ.1.87 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரம்..! மாவட்ட ஆட்சியர் வீரராகவுராவ் ஆய்வு!!!

ராமநாதபுரம்:  ராமேஸ்வரம் அருகே குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் மண் அரிப்பை தடுப்பதற்காக ரூ.1.87 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவுராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் மீன் இறக்கும் பாலம் அமைக்கப்பட்டதால், அங்குள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் மீனவ குடியிருப்புகளின் வீடுகள் கடலோரத்தில் அமைந்துள்ளதால், கடல் அலைகளால் தொடர்ந்து, அரிப்பு ஏற்பட்டு, நினைவு மண்டப பின்புற சுவர் முழுவதும் சேதமடைந்துள்ளது.

மேலும், இனிவரும் நாட்களில் தென்மேற்கு காற்று சூறாவளியாக வீசி ராட்சத அலை எழுக் கூடும். இதனால்,  நினைவு மண்டபம் மற்றும் மீனவர் குடியிருப்பை பாதுகாக்க மீன்துறையினர் ரூ.1.87 கோடியில் பாறாங்கல்லில் தடுப்பு சுவர் அமைக்க கடந்த ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாம்பன் குந்துகால் மீன்பிடி இறங்குதளம் பகுதியில் சுமார் 400 மீட்டர் நீளத்திற்கு இந்த தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை, கட்டுமான பணிகள் 90 சதவீதம் வரை நிறைவடைந்துள்ள நிலையில், இதனை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவுராவ் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: