அவிநாசியில் தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி...! சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்த இருவரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் விஸ்பரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 250க்கும் மேலாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 80 ஆக உள்ளது. மேலும், கொரோனா தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 125ஆக அதிகரித்துள்ளது. இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்புகள் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் மாருதி நகரை சேர்ந்த கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கடந்த 30ம் தேதி திண்டுக்கல்லிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது, அதன் முடிவுகள் வெளியான நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்த இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, அவர்கள் வசித்த பகுதிகளை தனிமைப்படுத்தி, கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டன.

Related Stories: