சென்னையில் முழு ஊரடங்கிற்கு பின் வங்கிகள் மீண்டும் திறப்பு!: 50% ஊழியர்கள் கொண்டு வங்கிகள் இயக்கம்

சென்னை: சென்னையில் முழு ஊரடங்கிற்கு பின் வங்கிகள் மீண்டும் வாடிக்கையாளர் சேவையை தொடங்கியுள்ளது. 50 சதவீத ஊழியர்களை கொண்டு இன்று முதல் வங்கிகள் இயங்கும் என்று அறிவித்த நிலையில் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர். முழு ஊரடங்கு காலத்திற்கு பிறகு தற்போது வங்கி கிளைகள் வாடிக்கையாளர்கள் சேவைக்காக திறக்கப்பட்டுள்ளன. சென்னை சாந்தோமில் உள்ள இந்தியன் வங்கியில் காலை முதலே வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனை செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் முதியவர்கள்.

ஆனால் அவர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்துதரவில்லை என்பதே இங்குள்ள முதியவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. குறிப்பாக அமர்வதற்கு கூட ஒரு நாற்காலியை வங்கி நிர்வாகம் செய்யவில்லை என்பதும் இவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது. 50 சதவீத ஊழியர்களை கொண்டு வங்கிகள் இயங்கலாம் என்று அறிவித்த நிலையிலும், ஒருசில வங்கிகளில் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டே வங்கிகள் செயல்படுவதாகவும் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வங்கிகளுக்கு உள்ளே செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே அவர்கள் வங்கிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அரசு அறிவித்த 50 சதவீத ஊழியர்களை கொண்டு வங்கிகள் இயங்கவில்லை என்பதே வாடிக்கையாளர்களின் புகாராக உள்ளது.

Related Stories: