×

தாறுமாறாக மின் கட்டணக் கொள்ளை

கொரோனாவால் பல ஆயிரம் பேருக்கு வேலை போய் விட்டது; மத்திய அரசும், மாநில அரசும் சலுகை அறிவித்தன. வழக்கம் போல குளறுபடிகளுக்கு குறைவில்லை. வங்கி கடன்களுக்கு தவணைகளை கட்ட வேண்டாம் என்றது மத்திய அரசு. ஆனால், அந்த நிம்மதி போய், அடுத்த வாரமே அதிர்ச்சி; தவணையை ஊரடங்கு முடிந்ததும் வட்டியுடன் கட்ட வேண்டும் என்று மடேர் என்று மண்டையில் குட்டின வங்கிகள். தமிழக அரசோ, மின் கட்டணத்தை சலுகை அறிவித்தது. மார்ச் மாதம் மீட்டர் ரீடிங் எடுக்காமல் முந்தைய பில் கட்டணத்தை கட்டுங்கள் என்றது மின்வாரியம்.இங்கும் சாமான்யனின் நிம்மதி பெருமூச்சுக்கு மிவா. வழக்கம் போல தந்தது சூப்பர் ஷாக். மே மாதம் பல்வேறு தேதிகளில் எடுத்த ரீடிங்குக்கு ஏற்ப, மே, ஜூனில் கட்ட சொல்லி 4 மாதத்துக்கு போட்ட கணக்கில் தான் அதிர்ச்சி. இதோ உதாரணத்துக்கு:

1  நவம்பர் 25 - ஜனவரி 25 இடையே 2 மாத கட்டணமாக ஜனவரியில் ஒருவர் 300 யூனிட் பயன்படுத்தி 530 ரூபாய் கட்டுகிறார்.
2  ஜனவரி 25 - மார்ச் 25 யூனிட்டுக்கு மார்ச் 25 ல் ரீடிங் எடுக்கவில்லை; முந்தைய கட்டணத்தை கட்ட சொல்லியது மின்வாரியம். அதாவது இந்த சாமான்யர் 530 ரூபாய் கட்டி விட்டார்.
3  மே மாதம் ரீடிங் எடுத்தார் மிவா. ஊழியர். அதில் 690 யூனிட் என்று வந்தது; தொகை போட்ட போது சாமான்யருக்கு மயக்கம் வந்து விட்டது. தொகை எவ்வளவு தெரியுமா?₹3034.
4  ஜனவரி வரை செலவழித்த பின் யூனிட் மீட்டரில் 1150 யூனிட் என்று காட்டியது. இப்போது 1840 என்று காட்டியது. அதனால் 690 யூனிட் என்று போட்டார் ஊழியர். சரி தானே என்று பலரும் நினைப்பர்.
5  இங்கு தான் தில்லுமுல்லு ட்விஸ்ட் செய்தது மிவா. 690 யூனிட்டை நான்கு மாதத்துக்கு ஒரே பில்லாக போட்டது தான் அந்த தில்லுமுல்லு.
6  2 மாதத்துக்கு ஒரு பில் என்ற வகையில் பிரித்தால் 345 என்று தான் வந்திருக்கும். இந்த யூனிட்டுக்கு தலா 650 என்று 2 மாதத்துக்கு மொத்தம் ரூ.1300 கட்டியிருக்க முடியும்.
7  மிவா போட்ட பில் ரூ.3034. தலா 2 மாதமாக பிரித்து பில் போட்டிருந்தால் (அப்படி தான் போட வேண்டும் என்பதே விதிமுறை) 1300 ரூபாய் தான் வந்திருக்கும். தில்லுமுல்லாக கணக்கிட்டதால் 1734 ரூபாய் கூடுதலாக பறித்து விட்டது மிவா.
8  மேலும், 2 மாத பில்லுக்கு 100 யூனிட் இலவசம்; அதை கழித்தால் இன்னும் யூனிட் குறையும். ஒரே பில்லாக போட்டதால் 4 மாதத்துக்கு ஒரு முறை தான் 100 யூனிட் குறைக்கப்பட்டது. இதிலும் மிவா. அட்டூழியம் என்பது சாமான்யர்கள் குமுறல்.
9  சரி, மார்ச் மாதம் கட்டச் சொன்னதே முந்தைய கட்டணத்தை; அந்த கட்டணத்தை கணக்கிலேயே எடுக்கவில்லை மிவா. இதிலும் அடுத்த அக்கிரமம் என்றும் பலரும் கொதிக்கிறார்கள்.
10  இதையும் சேர்த்தால் மொத்தத்தில் 2264 ரூபாய் அநியாயமாக மிவா. பட்டப்பகல் கொள்ளையடித்து விட்டது என்று தானே சொல்ல வேண்டும் என்றும் சாமான்யர்கள் கேள்வி. தமிழக அரசு நியாயம் வழங்குமா? பார்ப்போம். இதோ நான்கு கோணங்களில் நான்கு அலசல்:

Tags : Often, electricity bills, robbery
× RELATED ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழைநீர்