மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பீதியில் பொதுமக்கள்...!!!

மதுரை: மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 315 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 4,091ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது, சென்னையை அடுத்த மதுரையிதான் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.

இந்த கொரோனா பாதிப்புகள் பொதுமக்களியையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு தீவிர நடவடிக்கையாக மதுரையில் வருகிற 12ம் தேதி வரை, மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 3,776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 315 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,091ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 994 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 57 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: