காவலர் குடும்பங்களுக்கு ஓமியோபதி மாத்திரைகள்

ஊத்துக்கோட்டை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் காவலர் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில், ஊத்துக்கோட்டை காவலர் குடும்பத்திற்கும், காவலர்களுக்கும் கொரோனா வைஸ் தாக்காமல் இருக்க திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் ஊத்துக்கோட்டையில் உள்ள 25 காவலர் குடும்பத்திற்கும், ஊத்துக்கோட்டை சப்-டிவிஷனில் உள்ள ஊத்துக்கோட்டை, மகளிர் காவல் நிலையம்,  பெரியபாளையம், ஆரணி, பென்னலூர்பேட்டை, வெங்கல் ஆகிய காவல் நிலையத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. தலைமை காவலர், காவலர்கள் என 200 போலீசாருக்கு ஓமியோபதி மாத்திரைகளை டிஎஸ்பி சந்திரதாசன் வழங்கினார்.

Related Stories: