டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், சென்னை நீங்கலாக கடந்த மாதம் டாஸ்மாக் கடைகள்  திறக்கப்பட்டது. சென்னையை தொடர்ந்து மதுரை, தேனி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து  வருகிறது. இதனால், ஊரடங்கை 6 வது கட்டமாக ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கில் கோயில்களை  திறக்கவும், டீக்கடை உள்ளிட்ட தனிக்கடைகள் திறக்க அனுமதி வழங்கியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், ஞயிற்றுக்கிழமைகளில் மட்டும் எந்த தளர்வும் மருத்துக்கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் இன்று 4,200 கடைகள் மூடப்பட உள்ளது. இதனால், நேற்று மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. டாஸ்மாக்  மூலம் ₹80 கோடி வரையில் நாள் தோறும் வருவாய் கிடைக்கிறது. இன்று கடைகள் மூடப்படுவதை முன்னிட்டு நேற்று ₹110 கோடி வரையில்  மதுவிற்பனை நடை பெற்றிருக்கலாம் என டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Stories: