தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை தொடர்ந்து ஜூலை மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

சென்னை:  தமிழகத்தில் வருகின்ற ஜூலை மாதமும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது போல் தற்போது ஒரு கிலோ சர்க்கரை, துவரம்பருப்பு, பாமாயில் உடன் விலையில்லா ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்களை 6-ம் தேதி முதல் வீடுகளுக்கு சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் தற்போது ஜூலை மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து குடும் அடைதாரர்களுக்கும் ரூ.1000 உதவித் தொகையுடன், விலையில்லா அரிசி, சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொடர்ந்து மே மற்றும் ஜூன் மாதத்திலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும்  ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம்பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே மற்றும்  ஜூன் மாதங்களில் வழங்கிய அரிசி அளவின்படி கூடுதல் அரிசியுடன் நியாயவிலைக் கடைகளில் விலை இன்றி வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் ஜூலை 6 முதல் 9-ம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: