சென்னையில் அதிதீவிரமாக பரவும் கொரோனா தொற்று: ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்ததால் மக்கள் பீதி!!!

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 பேர் இன்று ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் திருவள்ளூரை சேர்ந்த 62 வயது மூதாட்டி, அதேபகுதியை சேர்ந்த 42 வயது ஆண், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர், சவுகார்பேட்டையை சேர்ந்த 67 வயது மூதாட்டி, அதேபகுதியை சேர்ந்த 67 வயது முதியவர் என மொத்தம் 6 பேர் ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், அதேபோல ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் சிகிச்சை பெற்று வந்த மயிலாப்பூரை சேர்ந்த 61 வயது முதியவர், பெரம்பூரை சேர்ந்த 64 வயது முதியவர், வடபழனியை சேர்ந்த 53 வயது ஆண் என 3 பேர் ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரையில் நேற்று இரவு முதல் இன்று காலை  வரை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழந்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: