மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாடு இன்று நேரடி ஒளிபரப்பு

சென்னை: அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பிரதோஷ வழிபாட்டு நிகழ்ச்சி இன்று மாலை 4.30 மணி அளவில் நேரடியாக ஆன்லைன் மூலம் ஒளிபரப்பப்பட உள்ளது. பக்தர்கள் //www.youtube.com/c/MYLAPOREKAPALEES WARARTEMPLE என்ற யுடியூப் சேனல் மூலம் நந்தி அபிஷேகமும் அதனை தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் பார்த்து தரிசித்து சுவாமி திருவருள் பெறலாம்.திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாடு 5.5.20, 20.5.20, 3.6.20 மற்றும் 18.6.20 ஆகிய நாட்களில் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக இன்று பிரதோஷ நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள் https://www.youtube.com/c/thiaga rajas  wamyvadivudaiyammanT empleOfficial என்ற யுடியூப் சேனல் மூலம், இன்று மாலை 4 மணிக்கு நந்தியம் பெருமான் அபி ஷேகமும் நேரலையில் பார்க்கலாம்.

Related Stories: