வெளிநாட்டு கைதிக்கு கொரோனா: புழல் சிறையில் பீதி

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை மற்றும் பெண்கள் பிரிவு என மூன்றிலும் 30 வெளிநாட்டு கைதிகள் உள்பட சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தண்டனை பிரிவில் உள்ள கைதிகளுக்கு முன்பு நடந்த பரிசோதனையில், 30 கைதிகள் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த ஒரு வெளிநாட்டு கைதிக்கும் ஒரு தலைமை காவலர், 3 காவலர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், விசாரணை பிரிவில் உள்ள மேலும் ஒரு வங்கதேச கைதிக்கு நோய்தொற்று உறுதியானது.

அவரை 1வது பிளாக்கில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் மற்ற கைதிகள் பீதி அடைந்துள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட புழல் மத்திய சிறையில் இருக்கும் கைதிகள், சிறை ஊழியர்கள், காவலர்கள், குடியிருப்பில் உள்ள காவலர்களின் குடும்பத்தினருக்கு தனி முகாம் அமைத்து, பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: