திருமங்கலத்தில் தொடர்மழை கண்மாய்களுக்கு நீர்வரத்து.

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாலையில் துவங்கி நள்ளிரவு வரையில் பெய்து வரும் மழையால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக திருமங்கலம் தாலுகாவில் முதலில் நிரம்பும் அம்மாபட்டி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதேபோல் பொன்னம்பட்டி, உரப்பனூர் கண்மாய்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மழை தொடரும்பட்சத்தில் முக்கிய கண்மாய்கள் நிரம்பும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 கொரோனா பரவுதலினால் வாழ்வாதாரத்தை நினைத்து கவலையுற்ற விவசாயிகள் இந்த மழையால் விவசாய பணிகளில் மும்முரம் காட்ட துவங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வரத்து கால்வாய்களை உரிய காலத்தில் தூர்வாருவதுடன், கண்மாய்க்குள் அதிகளவில் வளர்ந்து காணப்படும் கருவேலமரங்களை அகற்றினால் மழைநீரினை கூடுதலாக சேகரிக்க முடியும். மேலும் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்’ என்றனர்.

Related Stories: