கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் ரோபோ கண்டுபிடிப்பு : நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரவும் உதவுகிறது!!

சென்னை : கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தக்க மரியாதையுடனும் மதிப்புடனும் கையாண்டு அடக்கம் செய்ய புதிய ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த மவுட்டோ எலெக்ட்ரிக் மொபைலைட்டிக் என்ற நிறுவனம், இந்த ரோபோவை உருவாக்கி உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை உறவினர்கள் தொடவோ, அருகில் சென்று பார்க்கவோ முடியாத நிலை உள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூட இல்லாதபடி ஒரு கையெறி நிலைக்கு இந்த மனித சமூகம் சென்றுள்ளது. இந்த வேதனையை போக்கும் வகையில், ஜாஃபி என்ற ரோபோ ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

சாலை வசதி இல்லாத கிராமங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இனி இந்த ரோபோ மூலம் எளிதில் வெளியே கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும். அத்துடன் கொரோனாவுக்கு தங்கள் இன்னுயிரை இழந்தோரை ஆதரவற்றை சடலங்களை போன்று எரியாமல், கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்ய முடியும். இறப்புக்கும், இறுதி சடங்கிற்கும் அதிகம் மதிப்பும் முக்கியத்துவம் அளிக்கும் இந்தியா போன்ற நாடுகளில் தற்போதைய தேவையாக இந்த ரோபோ இருக்கும் என்று மவுட்டோ நிறுவனத்தினர் கூறுகின்றனர். இந்த ரோபோ குறித்து மவுட்டோ குரூப் சிஇஓ யஸ்மீன் ஜவஹர் அலி கூறுகையில், இந்த ரோபோ ஆம்புலன்ஸ் குறிப்பாக கிராமப்புற மக்களுக்காக வடிவமைக்கப்பட்டது. கிராமங்களில் சாலை வசதி இடங்களில் 4 சக்கர ஆம்புலன்ஸ் செல்ல முடிவதில்லை. ஆனால் நாங்கள் வடிவமைத்துள்ள ரோபோ, கிராமங்களில் உள்ள மூலை,முடுக்குகளுக்கும் சென்று ஆபத்தில் உள்ளவர்களை கொண்டு வர வல்லது, என்றார்.

Related Stories: