மாத்திரை வாங்க சென்ற வாலிபர் மீது காவலர்கள் தாக்குதல் போலீஸ் கமிஷனர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: மாத்திரை வாங்க சென்ற வாலிபரை அடித்து போலீசார் வேனில் ஏற்றிய விவகாரம் குறித்து 4 வாரத்தில் போலீஸ் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சதாம் உசேன் (23) என்பவர், நேற்று முன்தினம் காலை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்க பைக்கில் சென்றபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன், இவரை மடக்கி அத்தியவாசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நடந்து வர வேண்டும் என கூறியதுடன், சதாம் உசேனின் வாகனத்தை பிடிங்கியுள்ளார்.

அப்போது சதம் உசேன், ‘மாத்திரை வாங்க கூட வேளியே வர கூடதா, என் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், அவருக்கும், ஆய்வாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் ஆய்வாளரை சுற்றி வளைத்து கேள்வி எழுப்பினர். இதனால், கோபமடைந்த ஆய்வாளர் செல்போனில் தொடர்புகொண்டு சுமார் 30 போலீசாரை அங்கு வரவைத்து தர்ணாவில் ஈடுப்பட்ட சதாம் உசேனை சரமாரியாக தாக்கி, நடுரோட்டில் தர தரவேன இழுத்து சென்றதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.

இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இச்சம்பவம் அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நேற்று ‘தினகரன்’ நாளிதலில் செய்தியாக வெளிவந்தது. இதை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளார். மேலும், சென்னை போலீஸ் கமிஷனர் இதுகுறித்து விசாரணை செய்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: