சென்னை: ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் தங்களது வாழ்க்கை சான்றிதழ் தருவதற்கான கால வரம்புக்கு 3 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை (ஓய்வூதியம்) வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் வாழ்க்கை சான்றிதழ், பணியில்லா சான்று, மறு மணம் செய்யாத சான்று போன்ற இனங்களுக்கான சான்றிதழ்களை சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் ஒவ்வொறு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த சான்றிதழ் வழங்குவதவற்கான சூழல் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இதன் கால வரம்பை ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அவகாசம் வழங்குமாறு கரூவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளார்.