பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்துவிட்டு தமிழகம் வந்த டாக்டர் கொரோனாவுக்கு பலி

சென்னை: பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்துவிட்டு, தமிழகம் வந்தவர் கொரோனாவுக்கு பலியானார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 24 வயதுடையவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு, படித்து முடித்துவிட்டு கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்திற்கு வந்தார். கடந்த 5ம் தேதி  அவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் இளம் வயதில் உடல் அதிக எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம்: தாம்பரம் அடுத்த முடிச்சூர் மதுரை நகரை சேர்ந்த 62 வயது ஒப்பந்ததாரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில், அவரது மனைவி, மகன் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியானது. பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பூர்:  புளியந்தோப்பு அம்மையப்பன் தெருவில் 3 மாத கர்ப்பிணி, திருவிக நகரில் 9 மாத கர்ப்பிணி, பட்டாளம் ஜெய் நகரில் மனநலம் பாதித்த நபர், செம்பியம் கோவிந்தசாமி தெருவில் 2 பேர், பெரம்பூர் நெடுஞ்சாலையில் தம்பதி, கோபால் ரெட்டி காலனியில் தம்பதி, பேசின் பிரிட்ஜ் பகுதியில் 5 பேர்,

தலைமை செயலக காவலர் குடியிருப்பு பகுதிக்கு உட்பட்ட சுப்புராயன் தெருவில் 5 பேர், மேடவாக்கம் 2வது தெருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், எஸ்.எஸ்.புரம் பகுதியில் 4 பேர்,  ஓட்டேரி பட்டாளம் போலீஸ் கோட்ரஸ் பகுதியில் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஆய்வாளர், திருவிக தெருவில் அரசு ஊழியர் மற்றும் அவரது மனைவி, சிஆர் கார்டன் தெருவில் 3 பேர், ஹைதர் கார்டன் மெயின் தெருவில் ஒரே வீட்டில் 6 பேர், திருவிக நகர் ராம் நகர் 4வது தெருவில் 2 பேர், கேசி கார்டன் 3வது தெருவில் 4 பேர், மணியம்மை நகர், லட்சுமி நகர், கென்னடி சதுக்கம் ஆகிய பகுதிகளில் 3 பேர் என திருவிக நகர் மண்டலத்தில் நேற்று 147  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Related Stories: