புறநகர் மாவட்டத்தில் இளநிலை சித்த மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை புறநகர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரத்தில் செயல்பட்டு வரும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் புதிய இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை அமைக்க மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டுக்கு புதிய சித்த மருத்துவக் கல்லூரி வருவது மகிழ்ச்சியளிக்கக் கூடியது  என்றாலும் கூட, அதை சென்னையில் அமைக்க முடிவு செய்திருப்பது யாருக்கும் பயன் அளிக்காது. கல்லூரி சென்னைக்கு வெளியில் அமைக்கப்பட வேண்டுமே தவிர, சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்படக் கூடாது.

இளநிலை சித்த மருத்துவக் கல்லூரி தாம்பரம் சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப் பட்டால், இந்த பணியாளர்களில் ஒருவர் கூட நியமிக்கப்பட மாட்டார்கள். ஏற்கனவே பணியிலிருக்கும் பேராசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரை கொண்டே புதிய கல்லூரியை நடத்துவதுதான் சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் திட்டம். சென்னையின் புறநகரில் உள்ள ஏதேனும் ஒரு வட மாவட்டத்தில் புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டால், அங்கு புதிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும். எனவே, புதிய சித்த மருத்துவக் கல்லூரியை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஏதேனும் ஒரு வட மாவட்டத்தில் அமைக்க முன்வர எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: