பல்லாவரம் தாலுகாவில் ஜமாபந்தி ஆன்லைனில் மக்கள் விண்ணப்பிக்கலாம்

பல்லாவரம்: பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு, பொதுமக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்லாவரம் சுற்று வட்டார பகுதிகளான பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், குரோம்பேட்டை ஆகிய பகுதி மக்கள், தங்களது பட்டா பெயர் மாற்றம், சிட்டா அடங்கல், புதிய பட்டா பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பல்லாவரம் தாலுகா அலுவலகம் வருகின்றனர். இந்நிலையில், வரும் 29ம் தேதி அரசு சார்பில், ஜமாபந்தி நிகழ்ச்சி பல்லாவரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள், தற்போது கொரோனா நோய் தொற்று அபாயம் உள்ளதால், நேரடியாக அலுவலகம் வருவதை தவிர்த்து, ஆன்லைன் மூலம் தங்களது கோரிக்கைகளை மனுக்களை அனுப்பி வைக்கவேண்டும்.

அதன்படி, http/gdp.tn.gov.in/jamabanthi என்ற இணையதள முகவரிக்கு, 29ம் தேதி முதல், ஜூலை 15ம் தேதி வரை மனுக்களை அனுப்பலாம். அவ்வாறு பெறப்படும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என பல்லாவரம் தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: