தமிழகத்தில் தூய தமிழில் பேசுவோருக்கு ரூ.5000 பரிசு!: தமிழக அரசு புதிய திட்டம் அறிவிப்பு!

சென்னை: தூய தமிழில் பேசுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ் கலப்படமில்லாத தூய தனி மொழி. உலக முதல் தாய்மொழியின் 80 சதவீத சொற்கள் இன்றைய தமிழில் உள்ளன. சங்க காலத்திற்கு முந்தைய தமிழில் 100 சதவீத சொற்கள் முதல் தாய்மொழி சொற்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் தூய தமிழில் பேசினால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், நடைமுறை வாழ்க்கையில் கலப்பு சொற்கள் தவிர்த்து, தூய தமிழில் பேசுவோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 3 பேருக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தகுதியோடையோர் சொற்குவை.காம் என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நாடறிந்த தமிழ் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ் பற்றை உறுதி செய்து சான்றிதழ் பெற்று, சுய விவர குறிப்புகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதையடுத்து, நற்சான்றிதழ் அளிக்கும் தமிழறிஞர்களின் ஒருபக்க அளவிலான தனது விவர குறிப்புகளையும், ஒளிபடத்துடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் என செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: