ஸ்டான்லி மருத்துவமனை கைதிகள் வார்டில் ஒரே நாளில் 2 ஏட்டு உட்பட 11 போலீசாருக்கு கொரோனா

சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் பணிபுரியும் 2 தலைமை காவலர்கள் உள்பட 11 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில், நேற்று வெளியான பரிசோதனை முடிவில், அனைத்து காவலர்களுக்கும் நோய்தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்கள், சென்னை ராஜிவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் கைதிகள் வார்டில் வேலை செய்த காவலர்களுக்கு நோய்தொற்று ஏற்பட்டதால், அந்த வார்டு மூடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2 முதியவர், மீஞ்சூரை சேர்ந்த 50 வயது ஆண் ஆகியோர் பலியாகினர்.

Related Stories: