மேற்குவங்கத்தில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு....! கொரோனா தாக்கம் அதிகரிப்பால் முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வருகின்ற ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து முதல்வர் மம்தா பேனர்ஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்குவங்கத்தில் ரயில் சேவை மற்றும் மெட்ரோ சேவைக்கு தடை வருகின்ற 31ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே. இந்த ஊரடங்கு முடிய இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடு தளுவிய அளவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு மேலும் நீட்டிப்பு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவில் உள்ள வேறு சில மாநிலங்களும் விரைவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாநில அரசு அனுமதித்துள்ள வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் திறக்க அம்மாநிலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மெட்ரோ ரயில் சேவை மற்றும் பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை என தெரிவித்தார்.

Related Stories: