குன்னுர்- மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் கூட்டம்.: சாலையில் யானைகள் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் ஒரு குட்டி உடன் நான்கு காட்டுயானைகள் சுற்றி திரிந்ததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்க நேர்ந்துள்ளது. நெடுஞ்சாலையில் முகாமிட்டு இருந்த யானைகள் கூட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் அருகே சாலையை மறைத்து இருட்டில் நின்று இருந்தன.

வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பும் போது முகப்பு விளக்குகளின் வெளிச்சத்தில் மட்டும் யானைகள் சாலையில் நிற்பது தெரிந்ததால் ஓட்டுநர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் யானைகள் மீது மோதி விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டிவிட வேண்டும் என்று வாகனஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து யானைகள் கூட்டத்தை கட்டுப்படுத்த 10-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும், பலாப்பழம் சீசன் முடியும் வரை வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும் குன்னூர் வன அதிகாரி சசிகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: