சென்னையில் தினமும் 6,500 பேருக்கு பரிசோதனை.: கொரோனா பரிசோதனை மேலும் அதிகரிக்க அமைச்சர் நடவடிக்கை

சென்னை: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் சென்னையில் தேவையான அளவு பரிசோதனையை அதிகரிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில்  கொரோனா தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ள புளியந்தோப்பு குடிசை மாற்றுவாரிய புதிய குடியிருப்புகளை அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: திருவிக நகர் மண்டலம் முதல் இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளதாக  கூறியுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பொருட்கள் வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். எனவே யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய அவசியம் இல்லை என  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

விடு வீடாக சென்று கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலையும் மேலும் முதலமைச்சரின் உத்தரவுகளை பின்பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  முடிவெடுப்பார் என்று அவர் கூறியுள்ளார். 

Related Stories: