சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 56 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் 42,752 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 23,756 பேர் குணமடைந்துள்ளனர். 523 பேர் உயிரிழந்துள்ளனர். 18,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 1094 பேர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.07 சதவீதம் ஆண்கள், 39.92 சதவீதம் பெண்கள். இவர்களில் 55.99 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 42.53 சதவீதத்தினர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.47 சதவீதம் பேர் மரணம் அடைந்துள்ளனர்.