கண்ணதாசன், ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழா; பொதுமக்கள் பங்கேற்க தடை: கலெக்டர்கள் மரியாதை செலுத்த உத்தரவு

சென்னை: கண்ணதாசன், ம.பொ.சிவஞானம் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர்கள் மரியாதை செலுத்துவார்கள் என்றும், பொதுமக்கள் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஊரடங்கு காரணமாக  அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, வருகின்ற ஜூன் 24ம் நாள்(இன்று) கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் அன்று தியாகராய நகர், கோபதி நாராயண சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கும், ஜூன் 26ம் நாள் ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் அன்று தியாகராய நகர், போக் சாலையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள அன்னாரது திருவுருவப்படத்திற்கும் அரசின் சார்பில் சென்னை ஆட்சியர் மட்டும் மலர் தூவி மரியாதை செலுத்துவார்.

மேலும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த  மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். இதனை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: