முதல்வர் எடப்பாடி நாளை கோவை பயணம்: அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை ஆய்வு செய்கிறார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கோவை மாவட்டம் சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகளை நேரில் கள ஆய்வு செய்கிறார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (வியாழன்) காலை 10 மணிக்கு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்புப் பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். மேலும், அத்திக்கடவு-அவிநாசி நீரேற்றும் திட்டப்பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்ய உள்ளார்.

இதை தொடர்ந்து, 26ம் தேதி (வெள்ளி) அன்று காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில்,மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் முக்கொம்பு கதவணை கட்டும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் புதிய கதவணை பணிகளை நேரில் சென்று கள ஆய்வு செய்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: