மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ1000 வழங்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: ஊரடங்கை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ1000 ரொக்கம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ1000 ரொக்கம் நிவாரணத்தை அவர்கள் வீட்டிலேயே வழங்க முதல்வர் உத்தரட்டுள்ளார். அதன்படி, மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் ந்த அறிவிப்பை செயல்படுத்தும் துறையின் மாவட்ட அளவிலான அதிகாரி இடம் பெறுவார்கள்.

மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வழங்க ஏற்பாடு செய்யப்படும்.மாற்றுத் திறனாளிகள், நிவாரண தொகை வழங்க உள்ள அலுவலரிடம் விநியோக படிவத்தில் உள்ள விவரங்களை அளிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தங்கள் தேசிய அடையாள அட்டையின் அசலினை காண்பித்து அதன் நகலினை நிவாரண தொகை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து நிவாரண தொகை ரூ1000 பெற்றுக்கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு ரொக்க நிவாரண தொகை விநியோக படிவம் மற்றும் ஒப்புகை சீட்டு மாதிரிகள் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று அச்சிட வேண்டும்.

ஒவ்வொரு புத்தகத்திலும் 50 படிவங்கள் இருக்க வேண்டும். நிவாரணத் தொகை வழங்கவுள்ள துறையின் மாவட்ட அளவிலான அதிகாரி இந்த புத்தகங்களைவிநியோகிக்கும் அலுவலர்களுக்கு வழங்கிய விபரங்களை பராமரிக்க வேண்டும்.

இந்த உதவி மறுக்கப்படும் நிலையில் அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில அளவிலான உதவி மைய எண்ணான 18004250111-ஐ தொடர்பு கொள்ளலாம்.அரசாணையில் ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேலாக கூடுதல் நிதி தேவைப்படின் தேவையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சி தலைவர் மாற்றுத் திறனாளிகள் நலஆணையருக்கு தெரிவிக்கலாம். மிகுதியாக இருக்கும் மாவட்டங்களில் இருந்து நிதி மறு ஒதுக்கீடு வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: