திருப்போரூர் ஒன்றியத்தில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய படூர், நாவலூர், புதுப்பாக்கம், ஏகாட்டூர், கோவளம், மேலக்கோட்டையூர் உள்ளிட்ட 27 ஊராட்சிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து யாருக்கேனும் காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் படூர் ஊராட்சியில் நேற்று கொரோனா பரிசோதனை பணிகள் தொடங்கப்பட்டது.

வீடு வீடாக சுகாதாரப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர்கள் 27 ஊராட்சிகளிலும் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் விபரம், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் பற்றி தகவல் சேகரித்தனர்.  அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோரரனை, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் இராமகிருஷ்ணன், திருப்போரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: