இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசாருக்கு தொற்று

சென்னை: அயனாவரம்  காவல் நிலையத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்ஐக்கள் உட்பட 16 பேர் பணியாற்றி  வருகின்றனர். அவர்களில் ஒருவர் பின் ஒருவராக கீழ்ப்பாக்கம் அரசு  மருத்துவமனை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில்  கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது  தெரியவந்தது. அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து, காவல் நிலையத்தை  சுற்றிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

தண்டையார்பேட்டை:

ராயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் சளியால் அவதிப்பட்டு வந்தார். இதனால்  பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே அவரை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும்  கொண்டித்தோப்பு  காவலர் குடியிருப்பில் உள்ள அவருடைய வீட்டில்  ஆய்வாளரின் மனைவி, மகள், மகன் ஆகியோரை  சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைபடுத்தினர். மேலும் அவர் வசித்த விட்டில் கிருமிநாசினி  அடிக்கப்பட்டது. அவரது மனைவி குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.

Related Stories: