பயங்கர ஆயுதங்கள் புகைப்படம் வெளியீடு

லடாக் தாக்குதலில் சீன படையினர் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இரும்புக் கம்பியில் கூர்மையான ஆணி பொருத்திய ஆயுதங்களைக் காட்டும் இப்புகைப்படத்தை ராணுவ விவகார வல்லுநர் அஜய் சுக்லா தனது டிவிட்டரில் முதலில் பகிர்ந்துள்ளார். இந்த ஆயுதம் தான் சம்பவ இடத்தில் இருந்து இந்திய வீரர்கள் கைப்பற்றியதாகவும், இவற்றைக் கொண்டே ரோந்து சென்ற இந்திய படையினரை சீன படையினர் தாக்கியதாகவும் அதில் 20 பேர் பலியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் தாக்குதல்; சீனா அடுத்த சதி

லடாக் எல்லையில் பதற்றத்தை தொடர்ந்து இந்திய அரசு துறைகள் மற்றும் வங்கி இணையதளங்களை முடக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்தது. கடந்த 2 நாட்களாக சீனாவின் செங்க்டு நகரில் இருந்து இந்த முடக்க முயற்சி நடந்துள்ளது. இங்கு தான் சீன ராணுவத்தி–்ன் இணையவழிப் போர் பிரிவு செயல்படுகிறது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, தைவான் போன்ற நாடுகளின் அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களை சீனா ஹேக்கிங் செய்து கைவரிசை காட்டியுள்ளது. தற்போது, கொரோனா விவகாரத்தில் சீனாவை எதிர்த்து பேசியதால் ஆஸ்திரேலியாவையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டின் பல்வேறு அரசு துறை இணையதளங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடந்திருப்பதாக அந்நாட்டு பிரதமர் மோரிசன் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் சீனாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. அந்நிய நாட்டின் சதி என்று கூறி உள்ளார்.

Related Stories: