கொரோனா தொற்றை கண்டறிய மாவட்டம் முழுவதும் 11 மருத்துவ குழுக்கள்

*செங்கை கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லூயிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றை குறைக்க 7 நகராட்சிகள், 6 பேரூராட்சிகள், 54 ஊராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றை கண்டறிய மாவட்டம் முழுவதும் 11 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 200 குடும்பங்களுகு ஒரு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரடியாக வீடு வீடாக சென்று, பரிசோதனை செய்வார்கள்.

தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, பரங்கிமலை, மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் நோய் தொற்றை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்களில் இருந்து நகராட்சி ஆணையர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், கூடுதல் டாக்டர்கள், செவிலியர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளில் குடும்ப அட்டைகளுக்கு  வரும் 22 முதல் 26ம் தேதிக்குள் தலா ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும்.

Related Stories: