சென்னையில் வரும் 30ம் தேதி வரை இறைச்சி கடைகள் மூடல்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் வரும் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு சென்னையில் உள்ள இறைச்சி, மீன் கடைகளை மூடப்பட்டிருக்கும்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் வரும் 30ம் தேதி வரை கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.   இதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கோழி, ஆடு, மாடு, மீன் உள்ளிட்ட அனைத்து வகையான இறைச்சி கடைகளையும் மூட வேண்டும் என்றும் விதிகளை மீறி திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

Related Stories: