விலகியிருந்து விழிப்புடன் இருந்து வென்றிடுவோம் கொரோனா பெருந்தொற்று அரக்கனை! : அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை!!

சென்னை : அஞ்சாத அயல்நாடுகளும் திண்டாடி நடுங்கும் கொடூரக் கொரோனா திண்டாடி ஓடும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. சென்னையில் கட்டுக்கடங்காமல் சென்று விட்டது. அன்டை மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சென்னையை ஒட்டிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரமாகியுள்ளன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளன. உயிரிழப்புகளும் 40ஐ தாண்டியது.

இதனால், கட்டுக்கடங்காமல் பரவியுள்ள வைரசை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை அமுல்படுத்தப்பட உள்ளன. வழக்கத்தை விட இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கும்படி அரசு சார்பில் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

அஞ்சாத அயல்நாடுகளும்

திண்டாடி நடுங்கும்

கொடூரக் கொரோனா

திண்டாடி ஓடும் ....

விலகியிருந்து விழிப்புடன் இருந்து

வென்றிடுவோம் பெருந்தொற்று

அரக்கனை!

அஞ்சாதீர்கள்..நெஞ்சுரம் கொள்ளுங்கள் ..

முகக்கவசம் தரித்து

கைகளை சுத்தப்படுத்தி

அநாவசியம் தவிர்த்து

வீட்டிலிருங்கள் ..

அடங்கும் தொற்று!

நமது அரசு முன்னின்று மக்களை காக்கும்..

நாங்கள் இருக்கிறோம்

போர்க்களத்தில் ...

மருத்துவப் பணியாளர்களாக

காவல்துறை வீரர்களாக

உங்களுக்காக

போராடுகிறோம்!

ஒத்துழைப்பு மட்டும் தந்து

நம்பிக்கையோடு

காத்திருங்கள்....

கொரோனாவை வீழ்த்துவோம்! எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: