இன்ஜினை இணைக்கும் இரும்பு உருளை உடைந்தது; சரக்கு ரயில் பெட்டிகள் நடுவழியில் கழன்றன: கரூர் அருகே பரபரப்பு

கரூர்: மதுரையில் இருந்து சேலத்திற்கு இன்று காலை சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. 20 வேகன்களில் டிராக்டர் ஏற்றிச்செல்லப்பட்டது. இந்த ரயில் இன்று காலை 7.30 மணியளவில் கரூர் ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது இன்ஜினுடன் சரக்கு பெட்டிகளை இழுத்து செல்வதற்காக பொருத்தப்பட்டிருந்த இரும்பு உருளை திடீரென உடைந்தது. இதையறிந்த இன்ஜின் டிரைவர் ரயிலை அங்கேயே நிறுத்தினார்.

உரிய நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து உடனே அங்கு வந்த கரூர் ஸ்டேசன் மாஸ்டர், அதை பார்வையிட்டு, அதை சரி செய்ய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு வந்து உடைந்த இரும்பு உருளையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் 9.30க்கு வரவேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலதாமதமாக வரும் என தெரிவிக்கப்பட்டது.

Related Stories: