கொரோனா சிகிச்சை மையங்களில் சித்த மருத்துவத்தை அனுமதிக்க வேண்டும்: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: கொரோனா பாதிப்பை குணமடைய செய்வதில் சித்த மருத்துவம் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிற நிலையில், அதனை பயன்படுத்தி கொள்ள அரசு முன்வர வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நோயை சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா பாதித்த 183 பேரை, 5 நாட்களில் நலமாக்கி சாதனை படைத்து இருப்பதாகவும், கொரோனா மையங்களைத் தங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தால் குறுகிய காலத்தில் நோயாளிகளைக் குணப்படுத்திக் காட்டுவதாகவும் சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இது அரசு  பரிசீலிக்கப்பட வேண்டிய யோசனை என குறிப்பிடப்பட்டுள்ளது. சித்த மருத்துவ முறையில் 5 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைவது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த முறையை கடைபிடிப்பதன் மூலம் சென்னையை விரைவில் கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக மாற்ற முடியும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழலில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீட்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் மொத்தம் 3 வகையான சித்த மருந்துக் கலவைகளை உருவாக்கி இருப்பதாகவும், அவற்றை கொரோனா தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்தலாம் மற்றும் கொரோனாவை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, 2009ம் ஆண்டில் தமிழகத்தில் பரவிய பன்றிக் காய்ச்சலை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தயாரித்து வழங்கிய கபசுரக் குடிநீர் தான் பெருமளவில் கட்டுப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: