ஊரடங்கு அமல்படுத்தப்படும் இடங்களில் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி : தொழிலாளர்கள் தொழிற்சாலைகளிலேயே தங்க வைக்க அறிவுறுத்தல்!!

சென்னை : சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தக்கூடிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை நள்ளிரவு முதல் 12 மணி முதல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கிற்கு முன்பே தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி, தொழிற்சாலைகள் அல்லது அதன் அருகே தங்க வைத்து அவர்களை பணியமர்த்திக் கொள்ளலாம் என்று அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னையில் இருந்து தொழிலாளர்களை தினமும் அழைத்து வருவதற்கு அல்லது இரு சக்கர வாகனத்தில் வருபவர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது, சரக்கு போக்குவரத்திற்கும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித தடையும் கிடையாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனிடையே மாநிலங்களுக்கு இடையே தொழில் ரீதியிலான போக்குவரத்திற்கு தடையில்லை என கமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கு தொழில்ரீதியான மேற்கொள்ளும் பயணிகளுக்கு தடையில்லை என்றும் பயணம் மேற்கொள்வோர் 48 மணி நேரத்தில் திரும்பினால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: