பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் வேட்பாளர்கள் தில்லுமுல்லு தீவிரமாக விசாரிக்கப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் வேட்பாளர்கள் தவறான தகவல்கள் அளித்திருந்தால், தேர்தல் ஆணையமே அதனை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவுடன் சேர்த்து தங்களின் சொத்து, வழக்கு உள்ளிட்ட விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்கின்றனர். இதில் தவறு இருப்பின், அதற்கு தீர்வு காண நீதிமன்றத்தை நாட வேண்டும். இந்நிலையில், பிரமாண பத்திர முறைகேடு விவகாரங்கள் இனி தீவிரமாக விசாரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்களை அளிப்பது பற்றிய புகார்களை இனி ஆணையமே மறுஆய்வு செய்து, வழக்குகளின் தீவிரத்தை பொறுத்து அதனை சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளின் விசாரணைக்கு அனுப்பி வைக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: